இந்திய செய்திகள்செய்திகள்

இராணுவ ஹெலிகொப்டர் குன்னூரில் வீழ்ந்து விபத்து!

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான மிக்-17வி5 ரக இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முற்பகல் 11.47 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.

ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே சென்றுகொண்டிருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து நண்பகல் 12.20 மணியளவில் மலைப்பகுதியில் வீழ்ந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தரையிறங்க 5 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹெலிகொப்டர் வீழ்ந்தவுடன் அருகில் செல்ல முடியாத அளவு தீப்பற்றி எரிந்துள்ளது.

 

இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்துள்ளனர்.

இதில் 13 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்கள் தீயில் கருகியதால் அடையாளம் காண முடியாத நிலை காணப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மரபணு பரிசோதனை மூலம் உயிரிழந்தவர்களின் விவரங்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் குன்னூர் சென்று விபத்து குறித்து பார்வையிட்டுள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,941