in ,

இராமாயண கதையில் சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கோரும் கரீனா கபூர்

சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் ஹிந்தி படத்துக்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ எனும் சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.
தெலுங்கில் ராமாயண கதை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாகிறது. இதில் இராமராக பிரபாஸ், இராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். ரூ.500 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

இந்நிலையில், இந்தியிலும் இராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள அவர், அப்படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 186 பேருக்கு தொற்றுறுதி

புறக்கோட்டை டாம் வீதியில் 4 மாடி கட்டடத்தில் தீ விபத்து