கிழக்கு மாகாணம் செய்திகள்

இருதரப்பு பிரச்சினையை இன முரண்பாடாக மாற்ற முயற்சியென குற்றச்சாட்டு

மட்டக்களப்பு – வாகனேரி பிரதேசத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை சிலர் இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு முன்னெடுப்புக்களை செய்து வருகின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இச்சூழ்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக விசாரித்து இரு தரப்பையும் சந்தித்து பேசி ஒரு சமாதான நிலையினை உருவாக்கும் நோக்கத்தோடு முதல் கட்டமாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கிருபா, குளத்துமடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.பார்த்திபன், வாகனேரி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.காசினாதன் மற்றும் வாகனேரி கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஓவியராஜா ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரை சந்தித்து கலந்துரையாடினேன்.

சந்திப்பின் போது இது இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை. இதனை இனவாத சக்திகள் இனரிதீயான பிரச்சினையாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். நாம் அனைவரும் தெளிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அங்குள்ள மக்களிடம் வேண்டிக் கொண்டேன்.

மேலும் அம்மக்கள் குறித்த இப்பிரச்சினை இரு சாரார்களுக்கிடையில் ஏற்பட்டதென்றும் இதனை இனப்பிரச்சினையாக காட்ட முற்படமாட்டோம் என்றும் தெளிவாக கூறியிருந்தனர்’. என்றார் தெரிவித்தார்.

வாகனேரி பகுதியில் நேற்று (28) மாலை சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட சென்றோரை தடுத்த போது, தடுத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அறுவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. (150)

Related posts

இலங்கை – இந்தியா இடையிலான 2 வது ரி-20 போட்டி இன்று

Tharani

முல்லைத்தீவில் மீனவர் வாடி எரிப்பு!

கதிர்

மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை

Tharani