செய்திகள் பிந்திய செய்திகள்

இருவரை தாக்கிய ஒருவர் கைது!

நுவரெலியா – ஹட்டனில் கல்லெறிந்து தாக்குதல் நடத்தி இருவரைக் காயப்படுத்திய யாசகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (02) நடைபெற்ற இந்த சம்பவத்தில், பாடசாலை மாணவியொருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனநிலை பாதிக்கப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் குறித்த யாசகரை பிடிப்பதற்கு பிரதேசவாசிகள் முயன்றபோது, அவர் ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலுக்குள் சென்று மறைந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வந்த ஹற்றன் பொலிஸார், யாசகரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை ஹட்டன் நகரில் சில இளைஞர்கள், குறித்த யாசகரை கேலிக்குட்படுத்தும் வகையில் நடத்துவதால், அவர்களை கற்களால் தாக்குவாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்…!

Tharani

ஈஸ்டர் தாக்குதல் குறித்தான அறிக்கைகள் சமர்ப்பிப்பு

Bavan

அரசியல் பழிவாங்கலுக்கு பொதுத் தேர்தலில் பதிலடி; சஜித் அதிரடி!

Tharani

Leave a Comment