in

இரு கட்டமாக தடுப்பூசி பெற்றவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்! மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

நாட்டில் சில நிகழ்வுகள் மற்றும் உற்சவங்களைக் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது உப கொத்தணிகள் உருவாகுவதற்கு வழி வகுக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்தார்.

தற்போது மருத்துவமனை ஊழியர்களும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளது. இவர்களில் கனிசமானளவானோர் இரு கட்டங்களாகவும் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

எனவே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது மாத்திரமின்றி அடிப்படை சுகாதார விதிமுறைகளையும் சகலரும் பின்பற்றினால் மாத்திரமே கொவிட் அச்சுறுத்தலிலிருந்து மீள முடியும் என்று மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (28) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தற்கொலை குண்டுதாரிக்கு செப்பு வழங்கி ரிஷாட் உதவினாரா?

20 ஆவது அரசியல் திருத்தத்துக்கு ஆதரவளித்தபோதே ரிஷாத்தை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்!