in , ,

இறக்குமதியை நிறுத்தாது விட்டிருந்தால் இதுவே நடந்திருக்கும்!

நாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 300 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்மந்தமாக கலந்துரையாடல் ஒன்றினை நடத்திய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

“ரூபாயின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தால் நாட்டில் பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இறக்குமதியைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

வடக்கு மாகாணத்திலிருந்து தங்க கடத்தலைத் தடுக்க தங்கம் மீதான வரியை இந்தியா போன்று பராமரிக்க வேண்டும்.

அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்களை அமைக்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு நீர் நிலைகளை அண்டிய பிரதேசங்களில் 15 தொடக்கம் 20 ஏக்கர் காணியை வழங்க அரசு தீர்மானித்துள்ளது” என்றும் தெரிவித்தார்.

குழு மோதலில் தள்ளப்பட்ட நபர் பஸ் மோதி சாவு!

எமக்கு ஆளுநர் அதிகாரம் வேண்டாம் – கமலதாஸ்