இன்று(15) தொடங்கிய இந்தியா அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர்களான தங்கராசு நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் ,ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயமடைந்ததன் காரணமாக இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.