கிளிநொச்சி செய்திகள்

இலக்கை அடைய தைரியம் அவசியம் – சிறிதரன்

நம்பிக்கையையும் தைரியத்தையும் கைவிட்டால் அடைய நினைக்கும் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது என்றூ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று (14) நடைபெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,

இன்று எல்லோரிடம் பயத்தை ஏற்படுத்தும் விதமான பேச்சுக்களே முன்வைக்கப் படுகின்றன. பயம் இன்று நேற்று அல்லாது பல ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்தது.

கைது செய்யப்பட்டதும், காணாமலாக்கப்பட்டதும் என இந்த தியாயங்களுக்கு மத்தியில் துணிச்சல் மிக்கவர்களாக இம்மண்ணில் எம்மால் இருக்க முடிந்தது. ஆகவே வரலாறுகள் எப்போதும் மாற்றங்களைக் கொண்டு வரும்.

2007ல் எங்களுடைய தேசிய விடுதலைப் போராட்டம் இல்லாமல் போய் நாங்கள் இன்னொரு அந்நிய இராணுவத்தின் பிடிக்குள் அடங்கி இருப்போம், சிறை வைக்கப்படுவோம் என்ற எண்ணம் எம்மிடம் இருக்கவில்லை.

ஆனால் அதேநேரம் 2015ம் ஆண்டு அரசியலில் வந்தவர்கள் அந்த ஆதிக்க வெறியோடு வந்தவர்களின் ஊடாக மாற்றம் வரும் என எண்ணியது குறைவு. எனவே எம்மால் முடியுமென்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரமே மாற்றங்களை ஏற்படுத்த முடியும் – என்றார்.

Related posts

தண்ணீர் குடிப்பதால் ஒட்டகங்களைக் கொல்ல முடிவு-அவுஸ்திரேலியா

reka sivalingam

பதுளையில் 7 வர்த்தக நிலையங்கள் தாழிறக்கம்

கதிர்

ரஜினியால் பிரபலமாகும் வசனம்!

Bavan

Leave a Comment