செய்திகள்

இலங்கைக்கான அமெ. தூதர் பெப்ரவரியில் கடமையேற்பார்!

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சங் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்து தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி சங்கை நியமிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பரிந்துரை செய்திருந்தார்.
அதன் பின்னர் அவர் தனது சமர்ப்பணங்களை செனட்
சபையில் செய்திருந்தார். இதனையடுத்து கடந்த டிசம்பர் 20ஆம் திகதி அமெரிக்க செனட் சபையினால் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,940