in

இலங்கைக்கும் பரவுமா ஒமிக்ரோன் வைரஸ்? தடுப்பு நடவடிக்கையை உடன் ஆரம்பிக்கவும்!

சுகாதாரக்கொள்கை நிலையத் தலைவர் தெரிவிப்பு!

இந்தியாவின் கர்நாடக பகுதியில், கொரோனா திரிபான ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளநிலையில், இலங்கைக்கும் அது பரவக்கூடிய சாத்தியம் உள்ளது என்று கூறப்படுகின்றது. எனவே, அதனைக் கையாள்வதற்கான செயற்றிட்டங்கள் உடனடியாக வகுக்கப்படவேண்டும் என்று சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் மருத்துவநிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய வலியுறுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒமிக்ரோன் திரிபின் வீரியம் தொடர்பான விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் வரையிலும் அதுபற்றி உலகம் பொதுவான அபிப்பிராயமொன்றுக்கு வரும்வரையிலும் நாம் காத்திருக்கமுடியாது.
அதனை எதிர்கொள்வதற்கான முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். ஒமிக்ரோன் திரிபு குறித்து மட்டுப்படுத்தப்பட்டளவிலான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு அதனைக் கையாள்வதற்கான செயற்றிட்டங்கள் உடனடியாக வகுக்கப்படவேண்டும்.

கொரோனா வைரஸின் ஏனைய திரிபுகளுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரோன் திரிபு மிகவும் வீரியம்கூடியது என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேவேளை, நாட்டின் சனத்தொகையில் பெருமளவானோர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றிருக்கின்ற சூழ்நிலையில் வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடைசெய்தல் மற்றும் அவர்களுக்கான சுகாதாரப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்துதல் உள்ளடங்கலாக பல நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டியது அவசியம் – என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நோர்வேயின் ஒஸ்லோவிலும் ஒமிக்ரோன் கொத்தணி கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் வெடித்தது எரிவாயு சிலிண்டர்!

நேற்றும் 2 சடலங்கள் ஒதுங்கின!