in , ,

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

பங்களாதேஷுக்கு எதிராக டாக்கா, மிர்பூர் ஷியர்-ஏ-பங்ளா விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆறுதல் வெற்றியீட்டிய இலங்கை முதல் தடவையாக சுப்பர் லீக் புள்ளிகளைப் பெற்றது.

அணித் தலைவர் குசல் ஜனித் பெரேரா குவித்த அபார சதமும் துஷ்மன்த சமீர பதிவு செய்த 5 விக்கெட் குவியலும் இலங்கைக்கு 97 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

எனினும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் பங்களாதேஷ் தனதாக்கிக்கொண்டது.

இந்தத் தொடரில் முதல் தடவையாக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களைக் குவித்தது. குசல் ஜனித் பெரேரா 122 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 120 ஓட்டங்களைக் குவித்தார்.

39 ஓட்டங்களைப் பெற்ற தனுஷ்க குணதிலக்கவுடன் ஆரம்ப விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்த குசல் பெரேரா, 22 ஓட்டங்களைப் பெற்ற குசல் மெண்டிஸுடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மத்திய வரிசையில் தனஞ்சய டி வில்வா நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 55 ஓட்டங்களைப் பெற்றார்.
அணிக்கு மீளழைக்கப்பட்ட நிரோஷன் திக்வெல்ல அவசரமான ஓட்டம் ஒன்றை பெற முயற்சித்து 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அந்நிய செலவணி நெருக்கடி; பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாணய இடமாற்றம்!

31 ஆம் திகதி முதல் நடமாடும் விற்பனை வாகனங்களை நாடளாவிய ரீதியில் ஈடுபடுத்தல்