செய்திகள்பிந்திய செய்திகள்

இலங்கைக்கு இந்தியா வழக்கும் உளவு விமானம்

இந்­தியா தனது உள்ளூர்த் தயாரிப்பான டோர்­னி­யர் உளவு விமா­னம் ஒன்றை இலங்­கை­ப் படை­க­ளுக்கு வழங்­க­வுள்­ளது.

இதற்­கான பேச்சு இடம்­பெற்று வருவ­ தாக இந்­திய ஊட­கம் ஒன்று தெரி­வித்­துள்­ளது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­துக்கு இன்று சீன உளவு கப்­ப­லான யுவாங் வாங் 5 வரு­வ­தற்கு இந்­தியா எதிர்ப்­புத் தெரி­வித்­துள்ள நிலை­யில், இந்த டோர்­னி­யர் உளவு விமா­னத்தை இலங்­கைக்கு இந்­தியா வழங்­க­வுள்­ளது.

பெரும்­பா­லும் இந்த விமா­னம் இந்த மாத நடுப்­ப­கு­தி­யில் இலங்­கைக்கு வழங்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்கை தனது கடல் கண்­கா­ணிப்பு மற்­றும் பிற நோக்­கங்­க­ளுக்­காக இந்த உளவு விமா­னத்­தைப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214