in ,

இலங்கையர்கள் மீது ஜோர்தானில் கண்ணீர் புகைத் தாக்குதல்

ஜோர்தானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் மீது அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப் புகை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா காரணமாக தொழிலை இழந்த இலங்கை பணியாளர்கள் சிலர் ஜோர்தானில் சிக்கியுள்ள நிலையில், தம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு அவர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இலங்கை தூதரக அதிகாரிகள் சிலர் பணியாளர்களுடன் கலந்துரையாட சென்றுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை வழங்கவில்லை என தெரிவித்து பணியாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கிட்டத்தட்ட 340 இலங்கை தொழிலாளர்கள், அதிகாரிகளை சுற்றி வளைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஏற்பட்ட அமைதியின்னையைக் கட்டுப்படுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் மீது அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப் புகை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

பிரதமருடன் சுகாதார பரிசோதகர்கள் இன்று சந்திப்பு

எஸ்.பி.எல் தொடரை நடத்த அனுமதி!