செய்திகள் பிரதான செய்தி

இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சி!

இலங்கை சுற்றுலாத் துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலா ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சுற்றுலாப் பயணிகளின் வருகை 18 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடியானது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட சரிவை விட அதிகமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியொன்று உருவாக்கப்பட்ட பின்னரே மக்கள் பயணம் செய்வதற்கும் விடுமுறையில் செல்வதற்கும் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என தான் எண்ணுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 1996 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தின் போது, இலங்கை மத்திய வங்கி குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான சந்தர்ப்பத்தில், வரலாற்றில் முதற்தடவையாக சுற்றுலாத் துறையில் பாதிப்பு ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, குறித்த சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை 25 வீதம் வரை குறைந்ததாக, சுற்றுலா ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை 18 வீதம் வரை குறைவடைந்து, வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

யாலவனப் பகுதியில் கஞ்சா செடிகள் அழிப்பு

reka sivalingam

பேப்பர் வேல்ட் கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு

Tharani

கோத்தாபயவுடன் இணைந்தார் முரளி

G. Pragas

Leave a Comment