கிளிநொச்சி செய்திகள்

இலங்கையில் சிக்கியுள்ள இந்திய நாட்டவர்கள் விடுத்த கோரிக்கை!

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த தங்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுங்கள் என மத்திய அரசிடம் இந்தியத் தமிழர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு 8 பேர் வருகை தந்ததாகவும் அவர்களில் மூவர் கிளிநொச்சியிலும் ஐவர் முல்லைத்தீவிலும் தங்கியுள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலேயே தங்கியிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தாம் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தம்மை தமது குடும்பத்தினருடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related posts

மேன் முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நவாஸ்

G. Pragas

மீண்டும் அயர்ன்மான்

G. Pragas

விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு!

G. Pragas