செய்திகள் விளையாட்டு

இலங்கையில் பிரமாண்ட ஆடுகளத்தை கட்டத் திட்டம்

இலங்கையிலேயே மிக பிரமாண்டமான புதிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கை இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து அரசாங்கம் நிர்மாணிக்கவுள்ளது.

ஹோமகம, தியகமவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த விளையாட்டரங்கு முதற்கட்டமாக 40,000 ஆசனங்களைக் கொண்டிருக்கும் எனவும் இரண்டாம் கட்டமாக மேலும் 20,000 ஆசனங்களைக் கொண்ட பகுதி நிர்மாணிக்கப்படும் எனவும் தெரிய வருகின்றது.

இலங்கையில் கொழும்பு, காலி, கண்டி, தம்புள்ளை, ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்குகளை விட இந்த அரங்கு மிகப் பெரியதாக இருக்கும் எனவும் பகல் இரவு போட்டிகளை நடத்தக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யானையை பிடிக்க முயன்ற அதிகாரி பலி!

G. Pragas

கடற்படை முகாமுக்குள் சூடு; ஒருவர் பலி!

G. Pragas

பாலித மற்றும் ஐவர் விடுதலை!

G. Pragas