செய்திகள் பிரதான செய்தி

இலங்கையில் ஸ்மார்ட்போன் பாவனை அதிகரிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில், இலங்கையில் ஸ்மார்ட்போன் பாவனை அதிகரித்துள்ளதை கூகுள் நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

குறிப்பாக, வீடுகளில் இருந்து ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவது 32% வீதத்தால் அதிகரித்துள்ளது என கூகுள் அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்திருந்தது.

கொவிட்-19 தொற்றை அடுத்து, பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன. இந்த முயற்சிகளுக்கு உதவி செய்வது கூகிள் நிறுவனத்தின் நோக்கமாகும்.

இதன் பிரகாரம், சில்லறை விற்பனை நிலையங்கள், பூங்காக்கள், மருந்தகங்கள், பொதுப் போக்குவரத்து தரிப்பிடங்கள் போன்றவற்றில் ஸ்மார்ட்போன் பயன்பாடு 50 சதவீதத்திற்கு மேலாக குறைந்துள்ளதென கூகிள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

குருதித்தான முகாம்

G. Pragas

புலிகளும் ரெலோவும் இணைந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும்!

G. Pragas

அரச ஊழியர்களிடம் நன்கொடை கோரியது அரசல்ல – மறுக்கிறது அரசு!

G. Pragas