in , ,

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துக – நல்லூரில் உண்ணாவிரதம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி நல்லூரில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிப்பிக்கப்பட்டுள்ளது.

நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் மத தலைவர்களும் இனைந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தின் கோரிக்கைகளாக,

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிரான இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை இலண்டனில் நேற்று ஆரம்பித்த நிலையிலேயே, இங்கு உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 தொடர்பில் நாளை மீண்டும் பேச்சு!

தண்ணிமுறிப்பு விவசாயிகளுக்கு தேரர் உள்ளிட்ட குழுவால் தடை!