செய்திகள் விளையாட்டு

இலங்கை அணியை வெற்றி கொண்டது அவுஸ்திரேலியா

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-20 தொடரின் முதலாவது போட்டி இன்று (27) அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களினால் அபாரமான மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி இருபது ஓவர்கள் நிறைவில் இரு விக்கெட்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்றிருந்தது.

234 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களை மட்டும் பெற்று படுதோல்வியடைந்தது.

இதன்போது அவுஸ்திரேலியவின் துடுப்பாட்டத்தில் டேவிட் வோனர் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும், அரோன் பின்ஞ் 64 ஓட்டங்களையும், கிளன் மக்ஸ்வெல் 62 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இலங்கையின் பந்துவீச்சில் டசுன் ஷானக மட்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

இலங்கையின் துடுப்பாட்டத்தில் டசுன் ஷானக மட்டும் அதிகபட்சம் 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சில் அடம் சம்பா (3), பட் கம்மின்ஸ் மற்றும் மிச்சல் ஸ்ராக் (2) விக்கெட்களை கைப்பற்றினர்.

Related posts

இராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் விபரம்

reka sivalingam

படுகொலை வழக்கில் பிள்ளையானின் மறியல் நீடிப்பு;

G. Pragas

கொழும்பின் சில பகுதிகளில் வெள்ளம்

G. Pragas