செய்திகள் பிரதான செய்தி

இலங்கை அரசிடம் நட்ட ஈடு கோரிய அமெரிக்க வைத்தியர்

இலங்கை அரசாங்கத்திடம் நட்ட ஈடு கோரி அமெரிக்க வைத்தியர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் தனது 12 வயது மகள் உயிரிழந்தமைக்கு நட்ட ஈடு வழங்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எலெக்சாண்டர் ஏலோ என்ற அமெரிக்க வைத்தியரினாலேயே இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் மற்றும் குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related posts

புதிய தேசிய கொடி உருவாக்கம் ?

reka sivalingam

மனைவியை கொன்ற கணவன்

reka sivalingam

மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்; 16 பேருக்கு மறியல்

G. Pragas

Leave a Comment