in ,

இலங்கை அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றிய நால்வர் தமிழக பொலிஸாரால் கைது!

இலங்கை என்று கூறி திட்டில் விட்ட மீனவர் நால்வரைக் கைது செய்தது தமிழக பொலிஸ்!

முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவரை இலங்கை அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றிய நால்வர் தமிழக மரைன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண் என்று தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பெண் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரை அழைத்துச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இருந்து நேற்றுமுன்தினம் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், தனுஷ்கோடி முதலாம் மணல் திட்டில் பெண் ஒருவர் தனித்து நிற்பதை அவதானித்து, தமிழக மரைன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

அங்கு சென்று பெண்ணை மீட்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பெண் முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்தவர் என்று தெரிய்வந்தது.
அவர் 2018ஆம் ஆண்டு சென்னை விமான நிலையம் ஊடாகத் தமிழகம் சென்றிருந்தார் என்றும், விசா காலம் முடிந்த பின்னரும், வளசரவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
தற்போது அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் கடல் மூலம் சட்டவிரோதமாக இலங்கை செல்ல முயன்றுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி இராமேஸ்வரத்துக்குச் சென்ற கஸ்தூரி, தனுஷ்கோடியைச் சேர்ந்த மீனவர் ஒருவரிடம் இலங்கை செல்வதற்காக 30 ஆயிரம் ரூபா வழங்கியுள்ளார்.
சனிக்கிழமை மாலை பாம்பன், சின்னப்பாலம் கடற்கரையில் கஸ்தூரியை ஏற்றிய அந்த மீனவர், கடலில் நீண்ட நேரம் சுற்றிவிட்டு, நள்ளிரவு 12 மணியளவில் இலங்கை வந்துவிட்டது என்று கூறி, மணல் திட்டில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்ணிடம் பணம் வாங்கிய மீனவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவுப் பெண் தமிழகத்தில் கைது!

கோத்தாபய சர்வாதிகாரியே நாட்டுக்கு அவரே தேவை!-அமைச்­சர் அருந்­திக்க!