செய்திகள் விளையாட்டு

இலங்கை – இந்தியா இடையிலான 2 வது ரி-20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 வது T20 போட்டி இன்று இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது T20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த நிலையில் அது மழைக் காரணமாக கைவிடப்பட்டது.

அந்த போட்டிக்கான நாணய சுழற்சியும் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் இந்திய அணி தலைவர் வெற்றிப்பெற்று இலங்கைக்கு முதலில் துடுப்பெடுத்தாட வாய்ப்பை வழங்கியிருந்தார்.

எனினும் மழையில் இருந்து ஆடுகளத்தை பாதுகாக்க மூடப்பட்டிருந்த தார்ப்பாயில் இருந்த சிறிய துவாரத்தின் மூலம் மழை நீர் ஆடுகளத்திற்குள் இறங்கியது.

இதனை பரிசோதித்த போட்டி மத்தியஸ்தர் உள்ளிட்ட நடுவர்கள் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இரு அணிகளுக்கும் இடையிலான 2 வது T20 போட்டி இந்தூரில் நடைபெறவுள்ளது.

போட்டியில் பங்கேற்கவுள்ள லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை அணியில் எஞ்சவோ மெத்திவ்ஸ் நீண்ட நாட்களுக்கு பின்னர் இடம்பெற்றுள்ளார்.

அதேபோல் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிகர் தவான் மற்றும் வேக பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான T20 போட்டியில் இந்திய அணி 88 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிக்கொண்டது.

அதேபோல் குறித்த இரு அணிகளும் இன்று 18 வது T20 போட்டியில் மோதவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 17, T20 போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில் அதில் இந்திய அணி 11 போட்டிகளிலும், இலங்கை அணி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

அந்த வகையில் இன்றைய போட்டியில் இலங்கை அணியில் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் விளையாடவுள்ளதால் இந்திய அணி பெரும் சவாலை எதிர்கொள்ளும் என கிரிக்கெட் விற்பனர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

புத்தாண்டுக்குள் வாள் வெட்டுக் குழுக்களை ஒழிப்போம்- பாெலிஸ்

G. Pragas

அநாதை சிறுவர்களை குண்டுதாரிகள் ஆக்க பயிற்சி; பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம்!

G. Pragas

வாலிபர் சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு!

Bavan