இலங்கை கடற்றொழில் கூட்டுதாபன வரலாற்றில், ஒரே நாளில் அதிக அளவிலான விற்பனை இடம்பெற்ற தினமாக நேற்றைய தினம் (12) பதிவாகியுள்ளது.
குறிப்பாக நாளாந்தம் 14,000 முதல் 15,000 கிலோகிராம் வரையான மீன்கள் மாத்திரமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நேற்றைய தினத்தில் 27,600 கிலோகிராமிற்கும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடற்றொழில் கூட்டுதாபன வரலாற்றில் நாளொன்றில், 20,000 கிலோகிராமிற்கு அதிகமான மீன்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டிருக்கவில்லை.
கடந்த காலங்களில் பாரிய நட்டத்தை கடற்றொழில் கூட்டுதாபனம் எதிர்நோக்கியிருந்தது.
இந்த நிலையில், தற்போது கடற்றொழில் கூட்டுதாபனம் நவீனமயப்படுத்தப்பட்டு, தனது சேவையை படிப்படியாக முன்னோக்கி கொண்டு செல்கின்றது.