செய்திகள் பிரதான செய்தி

ஜனாதிபதி தேர்தல்: 33 பேர் கட்டுப் பணம் இழந்தனர்

இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேர் தமது கட்டுப்பணத்தை (டெபாசிட்) இழந்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில், 5 சதவீத வாக்குகளைப் பெறுபவர்கள் தமது கட்டுப்பணத்தை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கிணங்க நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக களமிறங்கிய சஜித் பிரேமதாச ஆகியோர் மட்டுமே, கட்டுப்பணத்தை மீண்டும் பெறும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாயும், சுயேச்சையாகப் போட்டியிடுவோர் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்துதல் வேண்டும். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக 18 பேரும், ஏனைய அரசியல் கட்சிகள் சார்பாக 2 பேரும், சுயேச்சையாக 15 பேரும் போட்டியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இந்தத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு 41 பேர் கட்டுப் பணத்தைச் செலுத்தியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

Related posts

ஊரடங்கு தளர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

Bavan

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் பலி!

G. Pragas

தூக்கத்தால் விபத்து; 18 பேர் படுகாயம்!

reka sivalingam