in ,

இலங்கை தமிழர் விவகாரத்தில் கவனம் செலுத்த இந்தியா மறுபரிசீலனை

இந்து சமுத்திரத்தில் சீனா ஆழமாக கால்பதிப்பதால் இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை வருவதாக பல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என தி பிரின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து தி பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கடந்த மாதம் இலங்கை சர்ச்சைக்குரிய 1.4 பில்லியன் திட்டமான கொழும்பு துறைமுகநகர திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. இதற்கு சீனா நிதியுதவி வழங்குகின்றது.

ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்துயுர் கொடுக்கும் நோக்கத்துடன் காணப்பட்ட புதுடில்லி, தற்போது இந்தியாவை சமநிலையில் வைத்திருப்பதை கைவிட்டுவிட்டு சீனாவின் பக்கம் சாய்வது குறித்த உறுதியான நிலைப்பாட்டை கொழும்பு எடுத்துள்ளதாக கருதுகின்றது என பல வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றம் சர்ச்சைக்குரிய கொழும்புதுறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு திட்டத்தை நிறைவேற்றியது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும், கொழும்பு துறைமுகநகரம் இலங்கைக்குள் ஒரு சீன மாகாணமாக மாறலாம் என்ற கரிசனைகளிற்கு மத்தியிலும் இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றியது.

உத்தேச புதிய கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு பரந்துபட்ட அதிகாரங்களை கொண்டிருக்கும் என கருதப்படுகின்றது.மேலும் இலங்கையின் மாநகரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் சட்டமூலங்கள் கொழும்பு துறைமுக நகரை கட்டுப்படுத்தாது. இதன் காரணமாக இது ஜனநாயக ரீதியில் செயற்படாது என்ற கரிசனைகள் காணப்படுகின்றன.

கொழும்பு துறைமுகநகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகநகரத்திற்கு என்ன நடந்தது என்பதன் காரணமாகவும் இலங்கை முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது என தெரிவித்த ஒரு வட்டாரம் இந்தியாவிற்கு இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம், இந்திய அரசாங்கங்களிற்கும் சவால்கள் ஏற்படலாம் என தெரிவித்தது.

இந்தியா இலங்கை உறவுகள் கடந்த பெப்ரவரியில் இலங்கை முத்தரப்பு கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி திட்டத்தை கைவிட்டதை தொடர்ந்து வீழ்ச்சியடைய ஆரம்பித்தன.

பொதுமக்கள் சீற்றம் நாளுக்கு நாள் அதிகரிப்பு-ராஜபக்ச ஆட்சி முடிவுக்கு வரலாம்

பயணக்கட்டுப்பாட்டை கடுமையாக செயல்படுத்தல் வேண்டும்