செய்திகள்தலையங்கம்வணிகம்

இலங்கை மத்திய வங்கி ஒரேநாளில் உயர் பணத்தொகையை அச்சிட்டு சாதனை

கொரோனா வைரஸ் தொடர்பான முடக்கம் மற்றும் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான செலவினங்கள் காரணமாகவும் நாட்டின் வரி வருமானம் குறைந்து வருவதானாலும், இலங்கை மத்திய வங்கியானது ஒரே நாளில் அச்சிடக்கூடிய மிக உயர்ந்த பணத்தொகையை அச்சிட்டுள்ளது என ‘டெய்லி மிரர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் ரூ .23 பில்லியனை அச்சிட்ட பின்னர், மேலும் ரூ .208.45 பில்லியனை அச்சிட்டதன மூலம் , மத்திய வங்கியின் மொத்த பங்குகளை ஒரு டிரில்லியன் ரூபாய்க்கு மேல் எடுத்துக்கொண்டது என அந்த செய்தியில் மேலும் கூறுகின்றது.

நேற்றைய புதிய பணப்புழக்கத்துடன், மத்திய பத்திரங்கள் அரசாங்க பத்திரங்கள் அல்லது அச்சிடப்பட்ட பணப் பங்கு என்பவற்றுடன் ஜூன் 25 அன்று ரூ .919.22 பில்லியனில் இருந்த தொகையானது தற்போது ரூ.1,127.65 பில்லியனை எட்டியுள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282