விளையாட்டு

இலங்கை மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி!

இலங்கை மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டியில் 28 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று (10) இந்த  போட்டி நடைபெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றது.தென்னாபிரிக்கா அணி சார்பில் ஏடன் மார்க்ரம்  48 ஓட்டங்களைப் பெற்றார் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

164 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால்  66 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.

போட்டி ஆட்டநாயகனாக 33 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 1 பவுண்ரி அடங்களாக 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட தென்னாபிரிக்கா அணி வீரர் ஹெய்டன் மார்க்கம் தெரிவானார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282