செய்திகள் பிந்திய செய்திகள்

இலத்திரனியல் திரையின்றி பேச கோத்தாவுக்கு அச்சம்

இலத்திரனியல் திரையின்றி பேச முடியாது என்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ விவாதம் பற்றி எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் உள்ளார் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (3) மாபலகம பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

தற்போதைய சூழ்நிலையில் எனது பிரதிவாதி கோத்தாபய ராஜபக்ஷவும் பிரதான வேட்பாளராக இருக்கிறார். எனவேதான் அவரை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கின்றேன். எனினும் இலத்திரனியல் திரை இன்றி பேச முடியாது என்ற அச்சத்திலிலேயே அவர் விவாதம் பற்றி எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் இருக்கிறார்.

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தனித்து விவாதத்தில் கலந்துகொள்ள அச்சம் என்றால் மஹிந்த ராஜபக்ஷவையும் உடன் அழைத்து வரலாம். மஹிந்தவை மாத்திரமின்றி ஆயிரக்கணக்கானோரை அழைத்து வந்தாலும் எனது தரப்பில் நான் தனியாகவே பங்குபற்றுவேன். அதற்கான பலமும் தைரியமும் என்னிடம் இருக்கிறது.

இவ்வாறு விவாதங்களை நடத்தினால் மாத்திரமே மக்களால் நாட்டை ஆட்சி செய்வதற்கு தகுதியான தலைவர் யார் என்பதை தெளிவாக இனங்காண முடியும் – என்றார்.

Related posts

சஜித்துடன் இணைந்தார் ஆரையம்பதி தவிசாளர்

G. Pragas

நடிகர் ராஜசேகர் காலமானார்

G. Pragas

மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

G. Pragas

Leave a Comment