செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

இல்லாதவர்களுக்கு சமூக பொறுப்புடன் உதவுவோம்! – விக்கி

“கொரோனா தோற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டான ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், வர்த்தக, விவசாய, மீன்பிடி மற்றும் உற்பத்தி செயற்பாடுகளின் இடைநிறுத்தம் காரணமாகவும், தொழில் வாய்ப்புக்களை இழந்து இதுவரை நாளாந்த வருமானத்தை நம்பி வாழ்ந்துவந்த பல குடும்பங்கள் மோசமாக பாதிப்படைந்துள்ளன.

இன்றும் சில சனசமூக நிலையங்கள் எம்மிடம் உதவி நாடி நின்றன. பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக வடக்கு கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் ஏராளமான குடும்பங்கள் தமது நாளாந்த உணவினை பெற்றுக்கொள்வதற்குப் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுவருவதாக அறிய முடிகின்றது.

இந்த மக்களின் துன்பங்களை போக்குவதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகள் எவற்றையும் எடுத்திருப்பதாக நான் அறியவில்லை. அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்தால் கூட அவை இந்த மக்களின் துன்பங்களை முழுமையாக போக்கும் வகையில் அமையப்போவதில்லை.

ஆனால், நாம் அனைவரும் தமிழ்த் தாயின் பிள்ளைகள் என்ற உணர்வுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் எமது சக உறவுகள் பசியிலும் பட்டினியிலும் வீழ்ந்து விடாமல் கை கொடுத்து உதவ வேண்டியது எமது கடமை.”

இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று (24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கை வருமாறு,

Related posts

வெலிகந்தை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு

reka sivalingam

சாம்பல் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்!

G. Pragas

கொராேனா குறித்து அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

G. Pragas