செய்திகள் பிரதான செய்தி முல்லைத்தீவு

இளஞ்செழியனுக்கு ரிஐடி அழைப்பாணை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பீற்றர் இளஞ்செழியனை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை விடுத்துள்ளனர்.

இன்று (02) முல்லைத்தீவு – மணற்குடியிருப்பில் அமைந்திருக்கின்ற அவருடைய வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குறித்த கடிதத்தை சிங்கள மொழியில் கையளித்து சென்றுள்ளனர்.

குறித்த கடிதத்தில் சிங்கள மொழியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றில் வாக்குமூலம் பெறவேண்டி இருப்பதனால் பீற்றர் இளஞ்செழியனை எதிர்வரும் 08 ஆம் திகதி 09 மணிக்கு இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை தென்படும் மோதிர வடிவிலான கங்கண சூரிய கிரகணம்

Tharani

மரக்கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது!

G. Pragas

அரசியல் கைதிகளை விடுவித்ததாக நாடகம்; கைதிகள் மறுப்பு!

G. Pragas