செய்திகள் பிரதான செய்தி

இளைஞன் பலியான விவகாரம்; சார்ஜன்ட் உட்பட எண்மர் கைது!

கம்பஹா – பூகொடை பொலிஸ் நிலைய காவலில் இருந்த இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைபொருள் குற்றச்சாட்டு ஒன்றில் பொல்கஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த 11ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட பின்னர் குறித்த சந்தேகநபருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட தினத்தன்று சிலர் அவரை தாக்கியதாக உயிரிழந்தவரின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இதன்படியே எட்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

திரிபோஷா கிடைக்குமா? கிடைக்காதா?

Tharani

பிக்காசோ ஓவியத்தை கடத்த முயற்சி; கோடீஸ்வரருக்கு சிறை!

Tharani

நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் ஆளுநர்?

Tharani