உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

இஸ்ரேல் ஏவுகணைகளை தாக்கியழித்த சிரியா

இஸ்ரேலினால் இன்று அதிகாலை ஏவப்பட்ட பாரிய எண்ணிக்கையிலான ஏவுகணைகளை தாம் தாக்கியழித்துள்ளதாக, சிரியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கோலன் (Golan) மலைக்குன்றுகளின் ஊடாக, தமது நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்கு (Damascus) அருகில் உள்ள இராணுவ இலக்குகளை நோக்கி, இந்த ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சிரியாவின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏவுகணைத் தாக்குதல் காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக, சிரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்த போதிலும் அவர்கள் எந்த தரப்பினர் என தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தினம் ஒரு திருக்குறள் (6/1-திங்கள்)

Bavan

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வாகனேரி மக்கள் பாதிப்பு

G. Pragas

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து கலந்துரையாடல்

reka sivalingam