இந்திய செய்திகள் செய்திகள்

இஸ்லாமிய போராட்டக் களத்தில் இந்துப் பெண்ணுக்கு வளைகாப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வரும் மேடையில், இந்து பெண்ணுக்கு நடைபெற்ற வளைகாப்பு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்ட நடைமுறைகளை எதிர்த்தும் சென்னை வண்ணாரப்பேட்டையில், ‘சென்னையில் ஒரு ஷாகின்பாக்’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தை முன்னெடுத்தனர் இஸ்லாமியர்கள்.

கடந்த 14ஆம் திகதி, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடியில் முடிவடைந்ததை அடுத்து, இப்போராட்டம் தொடர் போராட்டமாக மாறியது.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்களுக்கு, அப்பகுதியில் உள்ள இந்து மக்கள் உணவு சமைத்துக் கொடுத்து ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், போராட்டம் நடைபெறும் மேடையில் இந்து மதத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்ப்பிணிக்கு, இஸ்லாமிய பெண்கள் வளையல் அணிவித்து இந்து முறைப்படி வளைகாப்பு நடத்தினர்.

மேலும், வளைகாப்பு விழாவில் வழங்கப்பட்ட பரிசுப் பையில், ‘இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே’ என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

நன்றி – நியூஸ்நிஜம்

Related posts

வைரஸ் தாக்கம் – விமான நிலையத்தில் நோயாளர் காவு வண்டிகள்

reka sivalingam

இணையத்தள பாதுகாப்பு சட்டத்துக்கான நடவடிக்கைகள் பூர்த்தி…!

Tharani

மன்னாரில் 2 நாளாக ஆயுதம் தேடி அகழ்வு; மிஞ்சியது ஏமாற்றமே!

G. Pragas

Leave a Comment