in ,

ஈபிடிபி உட்கட்சி மோதலில் ஒருவர் காயம்!

ஈழமக்கள் ஜனநாயககட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்று இரவு இடம்பெற்ற உட்கட்சி மோதலால் கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் இரவு கட்சியின் உதவி மாவட்ட செயலாளருக்கும் இளைஞர் அணியினரை சேர்ந்த சிலருக்கும் கூமாங்குளம் பகுதியில் கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் உதவி மாவட்ட செயலாளர் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேச முடியாமல் இருந்தோர் பல்கலைக்கழகம் எங்கே என்கின்றனர் – இப்படி சாெல்கிறார் ஜீவன்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடல்!