ஈரானில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்றது. இதில் ஐ.நா பொதுச் செயலாளர் அன்ரோனியோ குட்டரெஸினால் ஈரானின் தேவையற்ற மரணதண்டனைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
ஈரானில் தூக்கிலிடப்படுபவர்களின் பெரும்பாலானவர்கள் சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள். மிகக் கடுமையான குற்றங்கள் அல்லாத விடயங்களுக்குக் கூட அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது.
ஈரானில் நியாயமான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை. சர்வதேச சட்டத்தை மீறி சிறார்
குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை விதிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் மாத்திரம் 105 பேர் தூக்கிலி டப்பட்டுள்ளனர் – என்றுள்ளது.
மறுபுறம், இந்தக் குற்றச்சாட்டு களை ஈரான் அரசு மறுத்துள்ளது. இது பாரபட்சமான குற்றச்சாட்டு என மேலும் தெரிவித்துள்ளது.