in ,

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஹரின் வெளியிட்ட கருத்தால் நாடாளுமன்றில் களேபரம்!

முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர, ஐபி முகவரி ஊடாக ஈஸ்டர் குண்டு தாக்குதலில் தொடர்புடைய நபரை அடையாளம் கண்டு கொண்டார். அந்த ஐபி ஊடாக அவருடன் பேசியவர் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரே.

இவ்வாறு ஹரின் பெர்னாண்டோ எம்பி இன்று (20) நாடாளுமன்றில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு குற்றஞ்சாட்டி மேலும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போது ஆளும் கட்சி எம்பிகள் பலர் கோபமடைந்து ஹரினுக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். இதனால் கோபமடைந்த ஹரின் அவர்களை கழுதை, மாடு, குரங்கு என்று விழித்து தனது எதிர்ப்பை காட்டினார்.

மேற்கண்டவாறு முன்வைத்த தனது குற்றச்சாட்டு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் வராதவை, மூலங்கள் ஊடாக அவற்றை அறிந்தே நான் இங்கு கூறுகிறேன் என்று தெரிவித்த ஹரின், மேலும்,

அந்த புலனாய்வு அதிகாரியை ஷானி கைது செய்த போது இராணுவு புலனாய்வு பிரிவினர் அந்த அதிகாரியை பொறுப்பெடுத்து கொண்டு, அது எங்களுடைய ப்ரொஜெட் என்று கூறியதாக ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாத்தளை ஷஹ்ரான் என ஒருவர் இருந்தார். அவரை பொடி ஷஹ்ரான் என சொல்வார்கள். பொடி ஷஹ்ரானுடன் பேசியது சொனி சொனிக் கோட் மூலமே. இந்த சொனி சொனிக் கோட் மூலமே இவர்கள் அனைத்தையும் பேசினர். இந்த சாட்சியத்தை டிஜிட்டல் பகுப்பாய்வு அதிகாரி ஒருவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளார்.

பொடி ஷஹ்ரானும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நௌபர் மௌவியும் கைது செய்யப்பட்டுள்ளார். நௌபரே பிரதான சூத்திரதாரி என தற்போது கூறுகின்றனர். ஆனால் இவர்கள் இருவரிடமும் ஆணைக்குழு வாக்குமூலம் பெறவில்லை.

ஈஸ்டர் தாக்குதல்களை விசாரணை செய்த சிஐடி அதிகாரிகள் பலரை இப்போது இடமாற்றியுள்ளனர். நான் பயமின்றி சொல்கிறேன். இவர்கள் தனி புலனாய்வு பிரிவை வைத்துள்ளனர். இந்தப் புலனாய்வு பிரிவை நிர்வகிப்பது அரசாங்கத்தின் தனிநபர் ஒருவரே.

அவர்தான் சிஐடி அதிகாரிகள் செல்ல வேண்டிய சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு செல்லும் ஜனாதிபதியின் பிரதிநிதி. அவர் தான் பிரதான சூத்திரதாரி.

சாரா யாருடைய வாகனத்தில் சென்றார். யாருடைய பாதுகாப்பின் கீழ் இருந்தார்கள். ஓஐசியின் மோட்டார் சைக்கிளில் தான் சாராவை கொண்டு சென்றார்கள். இந்த கொலைகளை நௌபர் மௌவியின் மேல் சுமத்திவிட்டு தப்பிக்க முயல்கின்றனர். என்றும் தெரிவித்தார்.

பள்ளிக்குடாவில் சிக்கியது 150 கிலோ கஞ்சா!

ஸ்ரீசுக மே தின பேரணியை நடத்த தீர்மானித்தது!