in

ஈஸ்டர் தாக்குதல் தற்கொலை குண்டுதாரிக்கு செப்பு வழங்கி ரிஷாட் உதவினாரா?

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரி ஒருவருக்கு சொந்தமான செப்பு தொழிற்சாலைக்கு, அப்போதைய கைத்தொழில் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் விசேட உதவிகளை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

எந்தவொரு காரணங்களும் இன்றி தங்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளமையானது சட்டவிரோத செயற்பாடாகும் என தெரிவித்து ரிஷாட் பதியுதீன் எம்.பி. மற்றும் அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இன்று (28) ஆராயும் போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகி இருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் குறித்த விடயத்தினை தெரிவித்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பெண்ணை மிரட்டி ரூ.7 லட்சம் கப்பம் கோரிய இரு சகாக்கள் கைது!

இரு கட்டமாக தடுப்பூசி பெற்றவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்! மருத்துவ சங்கம் எச்சரிக்கை!