in , ,

ஈஸ்டர் பயங்கரவாதம்; உண்மையான நீதி வேண்டும் – மன்னார் ஆயர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு உண்மையான நீதியும் தீர்ப்பும் கிடைக்கப்பெற வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு செய்தியில் இதனை தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்,

எமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர் பெற்றர். இந்த நாளிலே நாங்கள் மகிழ்ச்சி அடைவதற்கு காரணம் இயேசு நாதர் எமக்காக உயிரையே தியாகம் செய்தார்.

ஆனால் அவருடைய வாழ்க்கை முடிவடையவில்லை. அவர் அதை தாண்டி சென்று மீண்டும் உயிர் பெற்றார். அப்படியாக உயிர் பெற்று இயேசுநாதர் இன்றும் வாழ்கின்றார்.

நாங்கள் இந்த உயிர்த்த ஞாயிறு அன்று இதற்கு முன்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிர்த்த ஞாயிறு திருவிழா அன்று திருப்பலிக்காக சென்றிருந்த எத்தனையோ மக்கள் குண்டுவெடிப்பு காரணமாக உயிர் இழந்தார்கள். அவர்களை இன்றைய தினம் நாம் விசேடமாக நினைவு கூறுவோம்.

அவர்களுக்கு உண்மையான ஒரு நீதியும் உண்மையான தீர்ப்பும் கிடைக்கப் பெற வேண்டும் என்று நாம் இறைவனிடம் மன்றாடுவோம். என்றார்.

அதிபர், ஆசிரியருக்கு கொரோனா – யாழ். இராமநாதன் கல்லூரி மூடல்!

எம்பி பதவியை பறிக்க தடை கோரிய ரஞ்சனின் மனு தள்ளுபடி!