in ,

ஈஸ்டர் பயங்கரவாதம் – நாட்டில் உள்ள அரசியல் குழுக்களை குறிப்பிடவில்லை!

– இப்படி விளக்குகிறார் மல்கம் ரஞ்சித்

நேற்று (18) தான் தெரிவித்திருந்த கருத்தின் ஊடாக நாட்டில் உள்ள எந்த அரசியல் குழுக்களையும் குறிப்பிடவில்லை என்றும், இலங்கைக்கு வெளியே வேறு நாடுகளில் வஹாபிஸ கொள்கைகளை ஆதரிக்கும் குழுக்களை குறிப்பிட்டதாகவும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று (19) விளக்கமளித்துள்ளார்.

அத்துடன்,

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படவில்லை. எங்களைத் திருத்திப்படுத்த ஓரிருவரை மட்டுமே கைது செய்துள்ளனர்.

ஆனால் இன்னும் பல சூத்திரதாரிகள் கைது செய்யப்பட வேண்டும். அதற்குஅரசு நடவடக்கை எடுக்க வேண்டும் என்றும் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை “அன்று எமது சகோதரர்களை தாக்கியவர்கள் மதக் கடும் போக்குவாதிகள் அல்ல. அந்த மதக் கடும் போக்குவாதிகளை தம்முடைய கைப் பொம்மைகளாகப் பயன்படுத்தி, தமது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்திக் கெள்ள முயற்சித்தவர்களே அதனைச் செய்தனர். அதிகாரத்தை உறுதிப்படுத்த சில குழுக்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாகவே ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை கருதுகின்றோம்.” என நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வீரர் டில்ஹாரவுக்கு 8 ஆண்டுகள் தடை!

அனைத்து பல்கலைக்கழகங்களும் மீள திறக்கப்படுகிறது!