செய்திகள் பிரதான செய்தி

ஈஸ்டர் பயங்கரவாதம்; வீடு தேடி சென்று சிறிசேனவிடம் விசாரணை!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

விஜயராமயில் உள்ள அவரின் இல்லத்திற்கு இன்று (26) காலை சென்ற அதிகாரிகள் தற்போது முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரின் வீட்டிற்கு பொலிஸ் குழு சென்றுள்ளது.

Related posts

சாய்ந்தமருது இளைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

G. Pragas

தெஹிவளையில் மிருக வைத்தியசாலை

reka sivalingam

மீண்டும் சிஐடியில் ஆஜரான மங்கள

கதிர்