அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.
74 வயதுடைய டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் ஹெலிகொப்டர் மூலம் இராணுவத் தளத்திற்குச் சென்று, அங்கிருந்து புளோரிடாவுக்கு செல்லவுள்ளார்.
46வது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் நிகழ்வு அந்நாட்டு நேரப்படி நண்பகல் இடம்பெறவுள்ளது.