in ,

உடல் தகனத்தை எதிர்த்து கனடா நாடாளுமன்றில் மனு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றமை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நேற்று (23) மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா சஹிட் இந்த மனுவை சமர்ப்பித்து உரையாற்றினார்.

கனடாவில் உள்ள இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவர்கள் உள்ளிட்ட 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையொப்பமிட்ட மனுவை சமர்ப்பிப்பதாக இதன்போது சல்மா குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றினால் மரணிக்கும் அனைவரின் உடல்களையும் கட்டாய தகனம் செய்யும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறு மனுவில் கையொப்பமிட்டவர்கள் கோரியுள்ளனர்.

இலங்கை அரசின் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் எவையும் இல்லை எனவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு புறம்பாகவே அச்செயற்பாடு இடம்பெறுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனியும் இலங்கை நீதிக்காக செயற்படுமென நம்ப முடியாது – அதிருப்தியில் ம.உ. கண்காணிப்பகம்!

உ.சு. நிறுவனத்தின் இலவச கொரோனா தடுப்பூசி கானாவுக்கு கிடைத்தது!