செய்திகள் பிரதான செய்தி

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்!

ரஷ்யாவுக்கான  முன்னாள்  இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கான  முன்னாள்  இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க  இன்று  அதிகாலை  கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியிருந்த நிலையில்  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

மிக்ரக விமான கொள்வனவு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டு விசாரணைகளில்  சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்த நிலையில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் போதே உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை தேள்களை கடத்த முயன்ற சீனர் கைது!

G. Pragas

புதையல் தோண்டிய எண்மர் கைது

G. Pragas

சுவிஸ்லாந்து ஞானலிங்கேஸ்வரர் ஆலய நிதியில் உதவி

Tharani

Leave a Comment