செய்திகள்

உதவிக்கு வழங்கிய ஆட்டோவை ஒழித்துவிட்டு; திருட்டு போனதாக நாடகமாடியவர் கைது!

தனது தந்தையின் இறுதிக் கிரியைகளை செய்து கொள்வதற்கு உதவியாக ஒருவரால் வழங்கப்பட்ட முச்சக்கர வண்டியை மறைத்து வைத்து விட்டு திருட்டுப் போனதாகக் கூறி விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவரை கண்டி -புஸ்ஸல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நுகவெல கிராமத்தில் வசித்துவரும் சந்தேக நபரின் தந்தை சில தினங்களுக்கு முன்னர் இயற்கை மரணமடைந்துள்ளார். வறுமை நிலையில் காணப்பட்ட அந்த குடும்பத்தால் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகளை செய்து கொள்ள முடியாதிருந்துள்ளது.

இதனையடுத்து நபர் ஒருவர் மரண வீட்டில் அமைக்கப்படும் கூடாரங்களைக் கொண்டு வருவதற்காக தனது லொறியை வழங்கியதோடு மற்றுமொருவர் இலகுவாக வேலைகளை செய்து கொள்வதற்கு உதவியாக தனது முச்சக்கர வண்டியை வழங்கியுள்ளார்.

பின்னர் சடலம் கடந்த 31ம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி உரிமையாளர் வண்டியை தருமாறு கேட்டபோது சந்தேக நபரும் அவரின் ஏனைய சகோதரர்களும் முச்சக்கர வண்டியை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டதாக கூறியுள்ளனர்

இதையடுத்து முச்சக்கர வண்டி உரிமையாளரினால் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கண்காணிப்பு கமராக்களை பரீட்சித்து பார்த்ததில் குறித்த முச்சக்கர வண்டி கம்பளைப் பிரதேசத்தில் செல்வதனை அவதானித்துள்ளனர்.

இதையடுத்து சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது முதலில் மறுத்துள்ளார், பின்னர் முச்சக்கர வண்டியை தானே திருடியதாகவும் அதனை விற்பனை செய்வதற்காக பேராதனை கலஹா சந்தியில் வீடு ஒன்றில் மறைத்து வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன்படி பொலிஸார் முச்சக்கர வண்டியை நேற்று முன்தினம் (01) மாலை கைப்பற்றியதோடு குறித்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

Related posts

பொது நிர்வாக அதிகாரிகளின் நாளைய வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

G. Pragas

முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது

reka sivalingam

சுனாமி நினைவாலயம் அருகே வெடி பொருட்கள் மீட்பு!

G. Pragas