செய்திகள் பிரதான செய்தி

உனாவட்டுன ரயில் நிலையம் மூடல்!

காலி – உனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சுகாதார பிரவினரின் ஆலோசனைக்கு அமைவாக இன்று (13) அந்த ரயில் நிலையத்தை மூட தீர்மானித்ததாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து ஹபராதுவ பகுதிக்குச் சென்ற நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. குறித்த நபருடன் உனவட்டுன ரயில் நிலைய அதிபர் தொடர்புகளை பேணியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, ரயில் நிலைய அதிபர் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தீவிரம்; ட்ரம்பினால் ட்ரில்லியன் கணக்கில் நிவாரண ஒதுக்கீடு!

Bavan

ட்ரோன் தடை நீக்கம்!

Tharani

வடக்கு கிழக்கு புகையிரத காப்பாளர்கள் போராட்டம்

கதிர்