in ,

உப்புவெளி பிரதேச சபை பெரமுன வசம் சென்றது!

திருகோணமலை பட்டினமும் சூழலும் (உப்புவெளி) பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆர்.ஏ.எஸ்.டி. ரத்னாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

202ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, புதிய தவிசாளர் தெரிவிற்கான கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை பொதுமண்டபத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் 22 உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரத்னாயக்க தமக்கு ஆதரவாக 12 வாக்குகளைப் பெற்று 02 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைத்தியர் ஜி.ஞானகுணாளன் பதவி வகித்தார்.

தங்கம் வென்ற அமெரிக்க தடகள வீரருக்கு தடை!

இன்றைய கார்டூன்கள்