in ,

உயர்தர பாட விதானங்களில் இணைகிறது ஆயுர்வேத வைத்திய முறை!

ஆயுர்வேத வைத்திய முறை தொடர்பில் பாடசாலை மாணவர்களை தௌிவூட்ட சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய, ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி – சமூக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைத்துக் கொள்வதற்கு பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறையை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மன்னாரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி!

விசுவாசத்தை காட்டும் பொலிஸாரின் வன்மமே ‘உதயன்’ மீதான வழக்கு!