செய்திகள் பிரதான செய்தி மலையகம்

உயிர் தியாகம் செய்த ரிஸ்வானுக்கு புகழாரம்

நுவரெலியா – தலவாக்கலை பகுதியில் தனது உயிரையும் துச்சமென மதித்து, ஓர் உயிரை காப்பாற்றிய அந்த மனிதநேயத்துக்கு தலைவணங்குவதாக, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தலாவக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்த யுவதியைக் காப்பாற்றுவதற்காகச் சென்று உயிரிழந்த குடும்பஸ்தர் அப்தீன் ரிஸ்வானின் நற்செயலை பாராட்டிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும்,

இன, மத, மொழிக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் மனிதர்களே என்பதை இந்த உலகுக்கு உணர்த்தி சென்றுள்ளான் அப்தீன் ரிஸ்வான் என்றும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவருடைய ஆத்மா சாந்தியடைவதற்கும் இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியல் காரணங்களால்தான் இன்று இனங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களே அவற்றுக்கெல்லாம ஒருபடி மேல் சிந்தித்து செயற்படுகின்றனர்’ என்றும் அந்த வகையில் ரிஸ்வானின் செயற்பாடு மதிக்கதக்கது – என்றும் தெரிவித்தார்.

Related posts

தேர்தல் பதிவேட்டில் இருந்து ஒரு கிராமத்தில் 100 பேர் நீக்கம்

G. Pragas

டொனால்ட் ட்ரம்ப்க்கு கொரோனா இல்லை – உறுதியானது!

G. Pragas

நான் சென்ற இடத்தில் பயங்கரவாதி ஷஹ்ரானும் இருந்தான்- ஹக்கீம்

G. Pragas