செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

உரும்பிராய் விபத்தில் குடும்ப பெண் பலி!

யாழ்ப்பாணம் – உரும்பிராய் சந்திக்கு அருகில் இன்று (12) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோயன் கஜேந்தினி (27-வயது) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் சந்திக்கு அண்மையில் குறித்த பெண் தனது கணவருடன் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது பட்டா வானுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்ததுடன் அவரது கணவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

டெங்கு நோயாளர் எண்ணிக்கை குறைகிறது – மட்டு சுகாதார பணிப்பாளர்

G. Pragas

விபத்தில் பெண் பலி; ஒருவர் கைது!

G. Pragas

அடுத்த வருடமே மாணவர்களுக்கு சீருடை!

Tharani