செய்திகள் பிரதான செய்தி வவுனியா

உறவுகளுக்காக வீதியில் 1000 நாட்கள் – கண்ணீர் மல்கி போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் (15) 1000 நாட்களை பூர்த்தி செய்துள்ளது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் வவுனியாவில் இடம்பெற்று வரும் போராட்டமே இன்று 1000 நாட்களை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று (15) முற்பகல் வவுனியா கந்தசுவாமி ஆலயம் முன்னால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தமது உறவுகளை கண்டுபிடிக்க போஸ்னிய பாணியிலான நடைமுறை தேவை என்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் தெரிவித்தார்.

Related posts

அனுமதியின்றி ஏற்றிவந்த மர தளபாடங்களுடன் இருவர் கைது!

G. Pragas

கொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்!

K. Mathura

பதவி விலகினார் பேராசிரியர் ஜயந்த தனபால!

Tharani